தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைகளானது கடந்த 2012-13ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள முறைகளின் கீழ் வளரறி (Formative Assessment) மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் மற்றும் தொகுத்தறி (Summative Assessment) மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மதிப்பெண் முறைகளில் வளரறி மதிப்பீடு என்பது FA+FB என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. FA வில் புராஜெக்ட் மற்றும் மாதிரிகள் வடிவமைத்தல், செயல்பாடுகள் ஆகியவைகளுக்கு பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதே போல்FBயின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலும் சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தொகுத்தறி மதிப்பில் நடத்தப்படும் பாடப்பகுதியில் இருந்து கேள்வித்தாள் தயாரித்து பள்ளி அல்லது வட்டார மற்றும் மாவட்ட அளவில் கேள்வித்தாள் தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி பொதுத் தேர்வின்போது கடந்த 22.10.2019ம் தேதியில் அறிவித்தபடி FA, FBல் வழங்கப்பட்ட 40 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொகுத்தறிவு முறையின் கீழ் வழங்கப்பட உள்ள 60 மதிப்பெண்களுக்கான தேர்வுக்குரிய கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும்
அவ்வாறு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த சிஆர்சி மைய அளவில் மாற்றி அனுப்பி அதில் திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர் மேலும், 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கூடாது என்று அரசு ஆணையிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…