5, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு மையமா..?

Default Image
  • நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
  • 5 -ஆம் வகுப்பு  மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று  கி. மீ தூரத்தில் உள்ள பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என தகவல்.

தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு எழுதும் 5 -ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாத என பள்ளி கல்வித்துறை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 5 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று  கி. மீ தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என கூறி கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்