ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர்- தமிழிசை யோகா செய்தனர்..!
இன்று 5 வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளார்.