தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

இந்த வகையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர் .கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

Image result for சத்ய பிரதா சாஹூ

தமிழகத்தில் இதுவரை ரூ 127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்தனர். வாக்காளர் அடையாளஅட்டை மட்டுமின்றி 13ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.

67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது . 1,50,302 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றில் விவிபேட் 94,653 ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்