குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் – ஏடிஜிபி ரவி
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மே 31 வரை பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளையே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் சிலர் வீட்டில் குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அது சில நேரம் வன்முறையில் கூட முடிகிறது.
அந்த வகையில், ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளது என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான 5,740 புகார்களில் 5,702 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,424, நெல்லை மாவட்டத்தில் 702 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.