தமிழ்நாடு முழுவதும் 56 துணை ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழ்நாடு முழுவதும் 56 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜயந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிமைப்பணியின் கீழ் பல்வேறு துறைகளில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரக்கூடிய 56 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், முத்திரைத்தாள் தனித்தனி ஆட்சியர், முகர்ப்போர் வாணிப கழகம், வருவாய் கோட்டாட்சியர் போன்ற வருவாய்துறையின் கீழ் வரக்கூடிய துணை ஆட்சியர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக சோ.பல்துறை நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலால்துறை உதவி ஆணையராக ராம்குமார் மாற்றப்பட்டுள்ளார். இதுபோன்று வெவ்வேறு நிலையில் உள்ள 56 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…