சென்னைவாசிகள் கவனத்திற்கு… எந்தெந்த மின்சார ரயில்கள் ரத்து.? முழு விவரம் இதோ…
சென்னை: நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை , தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள், தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரம் ரயில் நிலைத்தில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வரும் 55 மின்சார ரயில்கள் மேற்கண்ட காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பிரதான ரயில்வே வழித்தடத்தில் 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதன் காரணமாக மாற்று பாதையில் ரயில்களும், மாநில போக்குவரத்து சார்பில் கூடுதல் பேருந்துகளும் இயக்கக்கப்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.20 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 வரையில் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம் :
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு : காலை 09.30, 09.56, 10.56, 11.40, நண்பகல் 12.20, 12.40 மற்றும் இரவு 10.40 மணி.
சென்னை கடற்கரை – தாம்பரம் : காலை 09.40, 09.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 11.05, 11.30, 11.59 மணி.
சென்னை கடற்கரை – கூடுவாஞ்சேரி : இரவு 07.19, 08.15, 08.45, 08.55, 09.40 மணி.
தாம்பரம் – சென்னை கடற்கரை : காலை 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40, நண்பகல் 12.05, 12.35 5 01.00 01.30 மற்றும் இரவு 11.40 மணி.
செங்கல்பட்டு – கும்மிடிபூண்டி : காலை 10.00 மணி
காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை : காலை 9.30 மணி.
திருமால்பூர் – சென்னை கடற்கரை : காலை 11.05 மணி.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை : காலை 11.00, 11.30, நண்பகல் 12.00 மற்றும் இரவு 11.00 மணி.
கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை : இரவு 08.55, 09.45, 10.10, 10.25, 11.20 மணி.
சிறப்பு ரயில்களின் அட்டவணை :
சென்னை கடற்கரை – பல்லாவரம் : காலை 09.30, 09.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணி.
பல்லாவரம் – சென்னை கடற்கரை : காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, நண்பகல் 12.00, 12.20, 12.40, 01.00 01.20, 01.40, இரவு 12.20, 12.45 மணி.
கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு : காலை 10.45, 11.10, நண்பகல் 12.00, 12.50, மதியம் 01.35, 01.55 மற்றும் இரவு 11.55 மணி.
செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி : காலை 10.00, 10.30, 11.00, 11.45, நண்பகல் 12.30, மதியம் 01.00 மற்றும் இரவு 11.00 மணி.
ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை–தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.#ChennaiDivision #SouthernRailway pic.twitter.com/dqEeC5QMt4
— DRM Chennai (@DrmChennai) July 22, 2024