மாஞ்சா நூல் பட்டம் விற்ற 55 பேர் கைது.!

வடசென்னையில் 58 பிரிவின் கீழ் தடையை மீறி பட்டம் விற்றதாக 55 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை முளைக்கீரையில் மாதவன் என்பவர் அப்பகுதியில் செல்லும் பொழுது அவரது கழுத்தை மாஞ்சா நூல் பட்டம் அறுத்து இந்நிலையில் இதனை தொடர்ந்து சென்னை காவல்துறையினர் துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் என்பவர் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் வடசென்னையில் இந்த நடவடிக்கை தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் கமிஷனர் மகேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தீவிரமாக வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவில் வடசென்னையில் 58 பிரிவின் கீழ் தடையை மீறி பட்டம் விற்றதாக 55 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 108 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.