பரபரப்பு…ஒற்றைத் தலைமை;ஓபிஎஸ்தான் வரவேண்டும் – தொண்டர்கள் முழக்கம்!
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,வரும் 23-ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.தேவையில்லாத பிரச்சனைகளை தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது.மேலும், சிறப்பு அழைப்பாளர்களுக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை, தலைமைக் கழக கூட்ட அரங்கில் இன்று, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/A50mYjXUPE
— AIADMK (@AIADMKOfficial) June 14, 2022
இந்நிலையில்,அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு வெளியே அக்கட்சி தொண்டர்கள் சிலர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.அதன்படி,ஒற்றைத் தலைமை வேண்டும் என ஒரு தரப்பினரும்,ஒற்றைத் தலைமை வந்தால் ஓபிஎஸ் தான் வர வேண்டும் என கூறி மற்றொரு தரப்பினரும் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.