தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 50 பேர் உயிரிழந்தனர். மேலும், வேறு நோய் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 22 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், கடந்த 8 நாட்களில் 360 பேர் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…