தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.763 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.763 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,26,507 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 4,94,770 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சிறிது நாட்களுக்கு பிறகு வாகன உரிமையாளர்கள் தினசரி அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு, பின்னர் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல் மற்றும் ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…