7 வயது சிறுவன் வாயில் இருந்து 526 பற்கள் அகற்றம் !
சென்னையை சார்ந்த பிரபுதாஸ் அவரின் மகனுக்கு மூன்று வயதாக இருந்தபோது கீழ் வலது தாடையில் வீக்கம் இருப்பதை பெற்றோர்கள் கவனித்தனர். ஆனால் வீக்கம் அப்போது சிறிதாக இருந்ததால் அவர்கள் அதை பெருட்படுத்தவில்லை.
பின்னர் வீக்கம் அதிகரித்ததால் பெற்றோர்கள் சிறுவனை கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதனிடம் இது பற்றி கூறினார்.
சிறுவனின் கீழ் வலது தாடையின் எக்ஸ்ரே மற்றும் சி.டி-ஸ்கேன் அடுத்து பார்த்த போது நூற்றுக்கனக்கான பற்கள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதுகுறித்து மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில் ,மயக்க மருந்தை கொடுத்த பின்னர் தாடையில் இருந்து சுமார் 200 கிராம் எடையுள்ள பற்கள் அகற்றப்பட்டது. அதில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான 526 பற்கள் இருப்பது அகற்றப்பட்டது என கூறினார்.
சில மிகச் சிறிய துகள்கள் என்றாலும் அவற்றில் பற்களின் பண்புகள் இருப்பதாக கூறினார். அனைத்து பற்களை அகற்ற ஐந்து நீண்ட மணி நேரம் ஆனது. “இது ஒரு சிப்பியில் உள்ள முத்துக்களை நினைவூட்டுவதாக கூறினார்.
அறுவைசிகிச்சை செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவன் சாதாரணமாக நிலைமைக்கு திரும்பினார் என கூறினார்.