தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக இருந்த நிலையில், தற்போது 1,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் சென்னையில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 81 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,020 லிருந்து 1,101 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 29,797 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 36 பேர் இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இன்று மட்டும் 6,753 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 86,339 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,937 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வார்டில் 809 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…