சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான பசு ஒன்று சமீபத்தில் கன்றுகுட்டி ஒன்றை ஈன்றது. இந்நிலையில் பசுவுக்கு திடீரென சாணம் , சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து முனிரத்தினம் அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றுள்ளார்.பசுவை பரிசோதனை செய்த மருத்துவர் மேல் சிகிசையாக அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லுமாறு அவர் அறிவுரை கூறினார்.
இதனால் முனிரத்தினம் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் வேப்பேரி உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் பசு வயிற்றுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதன்படி கால்நடை மருத்துவக் கல்லூரி இயக்குனர் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ குழுவினர் பசுவிற்கு சுமார் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் பசுவின் இரைப்பையிலிருந்து 52 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
இந்த கழுவுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இரைப்பையில் தொடர்ந்து தங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் தற்போது பசு நன்றாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது மட்டுமல்ல பசு, ஆடு மாடு போன்ற பிராணிகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்படுத்ததலை முற்றிலும் நிறுத்த வேண்டும் என கூறினார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…