#BREAKING: பொதுத்தேர்வு முடிவில் 5,248 மாணவர்கள் விடுப்பட்டது குறித்து தேர்வுத்துறை விளக்கம்.!
இன்று 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட முடிவில் தேர்வு எழுதிய 9,39,829 பேரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால், 10 வகுப்பு தேர்வை எழுத 9,45,007 விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடந்து, மீதமுள்ள 5,248 பேரின் தேர்ச்சி முடிவுகள் வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 5,248 மாணவர்கள் விடுப்பட்டதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை, விடுப்பட்டவர்களில் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் வாங்கியது மற்றும் பள்ளியைவிட்டு நின்றது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
அதில், காலாண்டு, அரையாண்டு, தேர்வு எழுதாத பள்ளிக்கு முழுமையாக வராத 4,359 பேர் தேர்ச்சி பெறவில்லை, மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியைவிட்டு நின்ற மாணவர்கள் 658 பேரும் தேர்ச்சியில்லை, பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தபின் 231 மாணவர்கள் உயிழந்துள்ளனர் அதனால் தேர்ச்சி அளிக்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.