#Breaking:தேர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Default Image

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.பொதுவாக களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்,நேற்று நள்ளிரவு நடைபெற்ற களிமேடு தேர் திருவிழாவில் தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிழந்துள்ளதனர்,15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில்,ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும்,தேரை சுற்றி தண்ணீர் இருந்ததன் காரணமாக மக்கள் பலர் தள்ளி நின்றதால் பெரும் உயிரிழப்பு சேதம் தவிர்ப்பு என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,விபத்துக்கான காரணம் குறித்து அறிய விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர்,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்,களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே,தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,இன்று காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து முதல்வர் தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல உள்ளார் எனவும்,விபத்து நடந்த பகுதியை பார்வையிட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதே சமயம்,தேர் விபத்து தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று அனைத்து கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும்,இதற்கு அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளிப்பார் எனவும் தகவல் வெளியாகிள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்