மத்திய சிறையில் இருந்து 51 கைதிகள் விடுவிப்பு.!
மதுரை மத்திய சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 58 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். பின்னர் விசாரணை முடிந்த பிறகு சிறிய குற்றங்களுக்கான கைதான 51 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டு மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சிறிய குற்றங்களில் கைதான கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.