நேற்று கோவையில் 500 கிலோ மீன்..! சென்னையில் இன்று 500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் .!

நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் கெட்டுப்போன 500 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் இன்று உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் 500 கிலோ கெட்டுபோன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 01-ம் தேதி முதல்முதலாக மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அந்த சோதனையில் ரசாயனம் கலந்த 2 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.இதைத்தொடர்ந்து தினமும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025