ஏடிஎம்மில் ரூ.5,000 பணம்.! காவல்நிலையத்தில் ஒப்படைத்த அதிகாரி.!

வேலூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் கிடைத்த ரூ.5,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சோமு என்பவர் அங்குள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது இயந்திரத்தில் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த அதிகாரி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.