சென்னையில் 500 சுகாதார பணியாளர்கள் நியமனம்.!

Default Image

சென்னையில் மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக உள்ளது.  இதில், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672  ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில்,  ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம்  ஆகிய மண்டலங்களில் முதற்கட்டமாக வீடு வீடாக சென்று வெப்ப சோதனை பரிசோதனை செய்யும் திட்டம் இன்று தொடங்குகிறது.

சென்னையில், ஏற்கனவே மண்டல வாரியாக களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள் நிலையில் தற்போது மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. இந்த சோதனையில்   உடல்வெப்பம் குறித்துக்கொள்ளப்படுவதோடு, சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா..? என்றும் சோதனை செய்யப்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்