1000 புதிய பேருந்துகள் வாங்க 500 கோடி நிதி ஒதுக்கீடு… தமிழக அரசு.!
தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் பழுதடைந்து இருக்கும் 500 பழைய பேருந்துகளையும் புதுப்பிக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பேருந்துகளோடு சேர்த்து, 1000 புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் விழுப்புரம், கோவை, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய கோட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் 200 (SETC) விரைவு போக்குவரத்து பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் 190 பேருந்துகளும், கோவை கோட்டத்தில்163 பேருந்துகளும், மதுரை கோட்டத்தில் 163 பேருந்துகளும், திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.