500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்;வேலைவாய்ப்பு முகாம் -தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னை வண்டலூர், தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில்,இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்.
500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பின்னர்,பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவவுள்ளார்.மேலும்,அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதலையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,கல்விச் சான்றிதழ்கள்,ஆதார் அட்டை மற்றும் பயோ டேட்டா ஆகியவற்றைக் கொண்டு நேரில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.