அமைச்சரவையில் 50% பெண்கள்.. நாளை மறுநாள் தேர்தல் முடிவு.. இன்று சீமான் அறிக்கை!!
நாம் தமிழர் ஆட்சியின் அமைச்சரவையில் 50% பெண்களுக்கு இடம் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியீடு.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் அளப்பரிய நம்பிக்கையை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. நம் இனத்தின் அரசியல் அங்கீகரித்திற்காக கடும் உழைப்பை சிந்தி பாடுபட்டது ஒருபோது வீண்போகாது என கூறியுள்ளார். யாரும் செய்ய துணியாத புரட்சிகர செயல்களை இந்த தர்தலில் நாம் துணிந்து செய்தியிருக்கிறோம்.
இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக 50% பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி சாதனையை நிகழ்த்தி உள்ளோம். ஆணுக்கு பெண் சமம் அல்ல, ஆணும், பெண்ணும் சமம் என்பதை உலகிற்கு காட்ட நாளை நாம் தமிழர் ஆட்சியின் அமைச்சரவையில் 50% பெண்களுக்கு இடம் வழங்கப்படும். மாநில சட்டமன்றத்தில் அவை தலைவராக ஒரு பெண் என பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்கு கனிந்து வருகிறது என கூறியுள்ளார்.
அதிகாரமும், பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகால கட்டமைப்புகளை கொண்டியிருக்கின்ற கட்சிகளுக்கு எதிராக எளிவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. கடுமையாக, கம்பிரமாக இந்த தேர்தலை எதிர் கொண்டியிருக்கிற உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். நம்பிக்கையான செய்திகள் நமக்கு வந்த வண்ணம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. எனவே, எதிர்மறை செய்திகளை புறம்தள்ளி நம்பிக்கையோடு வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு தயாராவோம். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். வாக்கு எண்ணும் மையத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்று, கொரோனா விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை ராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நம்பிக்கையோடு நில்லுங்கள்!
உறுதியாக நாம் வெல்வோம்! pic.twitter.com/q6nwmszqG0— சீமான் (@SeemanOfficial) April 30, 2021