#BREAKING: 50% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும்.. இந்திய மருத்துவ கவுன்சில் பதில்.!

அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தள்ளது.
மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி , திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வரும் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. இதுகுறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கலாம் என நீதிபதிகள் கூறிய நிலையில், 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025