முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு!
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பிற மாநிலங்களில், அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2020-ம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், செய்தி தொடர்பு செயலரும், நானடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.