சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது.
50% இட ஒதுக்கீடு:
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
எடப்பாடி பழனிசாமி வரவேற்பு:
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்:
இதற்கிடையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டரில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 100% இடங்களையும் ஒன்றிய அரசிடம் 2017-ல் தாரை வார்த்து, சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது அதிமுக அரசு. அரசு மருத்துவர் போராட்டத்தால், 2020-ல் பெயரளவில் அரசாணையை வெளியிட்டு, அதையும் செயல்படுத்தாமல் டாக்டர்களுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்தது.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம்அரசாணைக்கு உயிர்கொடுத்து, சமூகநீதியை நிலைநாட்டி உள்ளது திமுக அரசு. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களின் திராவிட மாடல் ஆட்சி சாதனை படைத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…