மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி..!

Default Image

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது.

50% இட ஒதுக்கீடு:

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

எடப்பாடி பழனிசாமி வரவேற்பு:

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில்,  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்:

இதற்கிடையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டரில்,  உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 100% இடங்களையும் ஒன்றிய அரசிடம் 2017-ல் தாரை வார்த்து, சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது அதிமுக அரசு. அரசு மருத்துவர் போராட்டத்தால், 2020-ல் பெயரளவில் அரசாணையை வெளியிட்டு, அதையும் செயல்படுத்தாமல் டாக்டர்களுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்தது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம்அரசாணைக்கு உயிர்கொடுத்து, சமூகநீதியை நிலைநாட்டி உள்ளது திமுக அரசு. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களின் திராவிட மாடல் ஆட்சி சாதனை படைத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்