50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு – இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .
முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.