50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு -சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் .
மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே காணத்திற்காக அனைத்து கட்சிகளும் இணைந்தது வரவேற்கத்தக்கது. ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.
மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி , திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.இதுகுறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கலாம் என நீதிபதிகள் கூறிய நிலையில், 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்தது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது.இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.