50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் – போக்குவரத்துத் துறை செயலாளர்

Default Image

பொதுமுடக்கம் முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய கடைகள் காலை 6  மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம்.சென்னையை தவிர்த்து மாநிலத்தில் பிற இடங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியில் உள்ள பகுதிகளில் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களை ஆகஸ்ட்  1-ஆம் தேதி  திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.ஆனால் பேருந்துகளை  பச்சை மண்டல பகுதிகளாக உள்ள இடங்களில் மட்டும் இயக்க அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

இதனிடையே தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,  ஊரடங்கு முடிந்த பிறகு 50  % பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும்.ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதி அளிக்க வேண்டும்.போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.பயணிகளிடையே இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும். வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும். கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal