பள்ளிக்கு 50% ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் – பள்ளி கல்வித்துறை!

Default Image

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் கொரானா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கல்வித் துறைகள் அரசு அலுவலகங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் தற்போது தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 50% பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு விரைவில் கொரனா வைரஸ் தாக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு பள்ளிகளும் கல்லூரிகளும் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணிக்கு வரக்கூடிய ஊழியர்கள் போல தேங்கி கிடைக்கக்கூடிய கோப்பு  பணிகளை முடிப்பதற்காக அனைத்து கல்வி அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுழற்சி முறையில் பணியாற்றுவது தொடர்ந்தாலும் 50 சதவீத ஊழியர்கள் தினசரி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்