மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..!
சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது பேசிய அவர் “ஆடாதொடா,நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும், வயல் பரப்புகளிலும் நடவு செய்திட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பழங்காலத்தில் நம் தமிழர்கள் நல்ல உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருந்தன. இதனால் நல்வாழ் வாழ்ந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் 2024-25 ஆம் ஆண்டில் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யும் வகையில் விதை விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.
விரைவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு!
நெல் ஜெயராமன் அவர்களின் மரபு சார் நெல் ரகங்களின் இயக்கத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான ஆறுபதாம் குறுவை, பூங்கா, தூயமல்லி , கருப்புகவுனி ,சீராக சம்பா , சீவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்றவற்றின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டு 20,9 79 விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை 12,400 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து பயனடைந்தனர்.
2024-25 ஆம் ஆண்டில் மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு 2025-26 ஆம் ஆண்டு பத்தாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யும் வகையில் 200 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்காக 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.