தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி- அரசாணையை வெளியிட்ட முதல்வர்!

Default Image

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கும் அறிக்கையை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில் முதல்வர் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் இன்று (18.8.2020), மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர்” என தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில், “காவல்துறையினர் பார்த்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல் துறையினர் அவர்களைத் தூத்திப் பிடிக்க முயன்றனர் எனவும், அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்” எனவும்,

“அரசுப் பணி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்களின் குடுப்பத்திற்கு நிதி உதவியாக 50 லட்சம் ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்