50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இன்று அனைவரது கைகளிலுமே ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் தவழ்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது மக்களை எளிதாக சென்று விடுகிறது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பலர் மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட மோசடி கும்பல்களிடம் சிக்கி பலர் ஏமாந்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுவாகவே காவல்துறை தரப்பில் தங்களது தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் எந்த ஒரு லிங்கையும் நம்பி அதன் உள்ளே சென்று விடாதீர்கள் என்றும் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதையடுத்து இந்த போட்டியை காண 50 GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது என்ற செய்தி இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனை நம்பி பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும். எனவே இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளை கண்டால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…