தற்போது உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்கொள்ளும் மிக பெரிய பிரச்னைகளில் ஒன்று சுற்று சூழல் பாதிப்பு. நாம் அனைவரும் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகை மற்றும் நாம் எரிக்க கூடிய பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வரும் புகைகளே இதற்கு காரணம் .தற்போது உலக நாடுகள் அனைத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகையை குறைப்பதற்கு மாற்று எரிசக்தி குறித்து சிந்தித்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் ,டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பெட்ரோல் ,டீசல் வாகனங்களுக்கு பதிலீடு செய்யும் அளவிற்கு மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்கள் பயன்பாடு இன்னும் உருவாகி வரவில்லை.
காரணம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டு உட்கட்டமைப்பு பெரிதளவில் இன்னும் உருவாகவில்லை ஆனால் அதற்கான வேலைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வேலையில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களில் ஏதர் எனர்ஜி நிறுவனமும் ஓன்று.
பெங்களூரை தலைமை இடமாக கொண்டு 2013-ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மின்சார வாகனகளுக்கு தேவையான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை 31 சார்ஜிங் நிலையங்களை அமைத்து இயக்கி வருகிறது. அதில் பெங்களூரில் 24 நிலையங்களையும், சென்னையில் 7நிலையங்களையும் அமைத்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் மட்டும் 50 நிலையங்கள் அமைப்பதாக கூறி உள்ளது.
மேலும் ஏதர் எனர்ஜி சார்ஜிங் நிலையங்களில் வேறு நிறுவனத்தின் வாகனங்களுக்கு கூட இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…