பிரபல கொள்ளையன் அவனது கூட்டாளிகள் உள்ளிட்ட 3 பேரை சென்னை வண்ணாரப்பேட்டையில் கைது செய்துள்ள போலீசார் 50 சவரன் நகைகளை கைப்பற்றியுள்ளனர்.
சென்னை மணலியைச் சேர்ந்தவன் பாபு என்ற டோரி பாபு. சென்னை முழுவதும் பரவலாகக் கொள்ளையடிக்கும் இவன் மீது வண்ணாரப்பேட்டை, காசிமேடு, வேளச்சேரி, அயனாவரம், சேத்துபட்டு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 முறை சிறைக்கு சென்று வந்த இவன், வடசென்னை தென்சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இடத்துக்கு ஏற்ப கூட்டாளிகளை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
காலை 9 மணி முதல் 11 மணிவரை அனைவரும் வேலைக்குச் செல்லும் நேரத்தில் ஆளில்லா வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையடிப்பதும், அலாரம் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் கொள்ளையடிப்பதும் வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த மாதம் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இரும்புக் கம்பி வியாபாரியான அருணாசலம் என்பவரின் வீட்டில் 40 சவரன் நகைகொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் டோரி பாபு, அவனது வண்ணாரப்பேட்டை பகுதி கூட்டாளிகளான பர்மா என்ற பரமசிவம் ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…