பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

Stalin's announcement Prison sentence

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.  “2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற திருத்தச் சட்டம்” இன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து விவரமாக பார்ப்போம்..

பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு வரை சிறை தண்டனை.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆனால் ஆயுள் காலம் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம் எனவும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் மசோதா எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதைப்போல, ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதாவும் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மேலும், இந்த சட்ட திருத்தம் மீதான விவாதம் சட்டப்பேரவையின் கடைசி நாளான நாளை நடக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்