5 ஆண்டு சட்டப்படிப்பு – ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!!

Default Image

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் தொடங்கியுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே தொடங்கிய நிலையில், சட்ட கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த அறிவிப்பில், சென்னையில் உள்ள சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும், சீர்மிகு சட்ட கல்லுாரியில், பி.ஏ., பி.பி.ஏ, பி.காம் மற்றும் பி.சி.ஏ, படிப்புடன் இணைந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி., நடத்தப்படுகிறது என்றும் அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் சரஸ்வதி சட்ட கல்லுாரியில், பி.ஏ., எல்.எல்.பி, படிப்பு மட்டும் நடத்தப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்ப பதிவுகளை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 26 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும், 3 ஆண்டுக்கான எல்.எல்.பி, சட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுக்கான எல்.எல்.எம், படிப்புக்கான மாணவர் சேர்க்கை பதிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாணவர்கள் மேலும் விவரங்களை 044 – 2464 1919, 2495 7414 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்