7 வயது சிறுவனை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை ..!

Default Image

கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சார்ந்தவர் ஜெப செல்வின் (27) இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.ஜெப செல்வின் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் கன்னியாகுமாரியில்  உள்ள  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில் ஜெப செல்வின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நம்பி ஜெப செல்வினுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்