நாமக்கல்லில் கோர விபத்து.. 5 பெண்கள் உடல் நசுங்கி பலி.! லாரி மீது கார் மோதி நேர்ந்த கொடூரம்.!
நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் ஊரில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அந்த விழாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் ஒரு காரில் வந்துள்ளனர். கோயில் விழா முடிந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகையில் நாமக்கல், பரமத்திவேலூர் பகுதியில் நின்று கொண்டிருந்த கன்டென்டர் மீது இவர் சென்ற கார் மோதியது.
மின்னல் வேகத்தில் வந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் காரில் பயணித்த 5 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த குழந்தை மற்றும் ஒரு நபர் மட்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.