அண்ணா நகர் 5-வது அவென்யூ சரவணபவன் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைதொடர்ந்து, 10 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
5 அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் தனியார் வங்கியும், அடுத்தடுத்த தளங்களில் ஐடி நிறுவனம் ஒன்றும், பல தனியார் நிறுவனங்களும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இன்று அலுவலக நாட்கள் என்பதால் அனைத்து ஊழியர்களும் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
தரைத்தளத்தில் இயங்கிவரும் வங்கியில் இருந்து முதலில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து தளங்களுக்கு மின்கசிவு மூலமாக தீ வேகமாக பரவியது. இதனால் 5 மாடி வரையிலும் தீ கொழுந்து விட்டு எறிந்தது. தீ பற்றியெரிந்த தகவல் அறிந்து, தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தீ விபத்து ஏற்படும் ஆரம்ப நிலையிலே வெளியில் வந்துவிட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுவழியில் செல்லுமாறு திருப்பி விடப்பட்டன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…