நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் அங்கு இயங்கி வரும் கடையில் பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்தனர். வீட்டிற்கு சென்று அந்த சாக்லேட்டை பிரித்து பார்கும்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அவர், ராசி புரத்தை சேர்ந்த மொத்த விற்பனையாளரான கிருஷ்ணா ஏஜென்சியிடம் இருந்த அந்த சாக்லேட்டை வாங்கியதாகவும், அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் சாக்லேட் மேல் உறையில் அதன் பேக்கிங் தேதி ஜனவரி மாதம் 29 ஆம் தேதி என்று குறிப்பிட்டிருந்தது. பேக் செய்த தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை அதனை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சாக்லேட்டின் காலாவதி தேதி முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அதில் புழுக்கள் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…