இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும்கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூட்டத்தில் தெரிவித்தனர் என கூறினார்.
இந்நிலையில், நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் 5 தீர்மானங்கள் இதோ,
1.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.
2.தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது.
3.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்.
4.தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்.
5. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…