தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை விடாமல் பெய்து வருகிறது.
இந்நிலையில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மழை தொடர்பான விபத்தில் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. அதில் எருமை மற்றும் பசு மாடுகள் 6 உயிரிழந்ததாகவும், 11 ஆடுகள் உயிரிழந்துள்ளது என தமிழக பேரிடர் மேலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது. குடிசை மற்றும் வீடுகள் என 63 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. மேலும் 5 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…