சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினர் லாக்கப்பில் வைத்து தாக்கியதில் உயிரிழந்த தந்தை மகன் விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்து தற்பொழுது உச்சநீதிமன்றத்தால் அந்த காவலர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் உதவி ஆய்வாளர்பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு உடல்நலக் குறைபாடு இருந்ததால் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலு முத்து ஆகியோர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 14 நாட்கள் காவல் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு மூன்று காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…