சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து வந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். அதன் பின்னர், அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர். இதுகுறித்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த A.- ராமகிருஷ்ணன், (போடிநாயக்கன்பட்டி) (மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்)
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த R. சரவணன் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் )
R. சண்முகபிரியா, (மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்)
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த
திம்மராஜபுரம் திரு. ராஜகோபால்,
( மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர்)
திரு. டி. சுந்தர்ராஜ். (தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணைச் செயலாளர்)
ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் சசிகலாவிடம் போனில் பேசியதாக அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…