ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.! காரணம் என்ன.?

கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி மோகன் (வயது 38) என்பவர் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை முதல் மோகன் வீட்டில் இருந்து நீண்ட நேரம் ஆகியும், யாரும் வெளிய வராததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு வீடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளனூர் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்த கூறுகையில், மோகன் கடன் சுமை தாங்கமுடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கந்துவட்டி பிரச்சனையால் நேற்று இரவு மோகன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024