விழுப்புரம்மாவட்டம் சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருண் (33) இவர் நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (27) .இவர்களுக்கு தர்ஷிணி (4), பிரியதர்ஷிணி(3), பாரதி(1) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அருணுக்கு மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது. மேலும் தொழிலில் வருமானம் இல்லாததால் பண கஷ்டதில் அருண் இருந்து உள்ளார். இதனால் விரக்தியடைந்த அருண் நேற்று இரவு 11:30 மணிக்கு நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு விஷத்தை தனது மனைவி மற்றும் மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த அருண் வீட்டின் அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஐந்து பேரும் இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலைக்கு முன் அருண் வெளியிட்ட “வாட்ஸ் ஆப்” வீடியோவில் மூன்று நெம்பர் லாட்டரியால் தான் இந்த நிலைக்கு ஆளானதாகவும், எனவே லாட்டரி விற்பனையை ஒழிக்க வேண்டும் மற்ற குடும்பங்களை காப்பாற்றுங்கள் என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…