NLC-யால் மாசடைந்த சுற்றுசூழல்.? ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு.! தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை.!
நெய்வேலி , பரங்கிமலை என்எல்சி தொழிற்சாலைகளினால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறி, ஓர் தண்ணார்வ அமைப்பு ஒன்று என்எல்சி சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் , நீர், காற்று ஆகியவற்றை ஆய்வு செய்தது. அதில், என்எல்சி சுற்றுப்புறத்தில் அதிகமான அளவில் இரசாயனங்கள், கன உலோகங்களால் பாதிப்படைந்திருந்து என ஆய்வில் கூறப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையை அடிப்படியாக கொண்டு , தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம், மாவட்ட நிர்வாகம், மத்திய மாநில அரசுகள், நீர்வளத்துறை, என பல்வேறு அரசு அமைப்புகள் பதில் அளிக்க வேண்டும் என வழக்கை இன்று (ஆகஸ்ட் 28) ஒத்திவைத்து இருந்தது.
குறிப்பிட்டபடி இன்று வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தன்னார்வ அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நீர் மற்றும் நில மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்த குழு ஏற்கெனவே சில இடங்களில் நீர் மற்றும் நில மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தது. ஆய்வின் முடிவுகள் விரிவாக கிடைத்தவுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.