சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.!

Default Image

நாளை கொண்டாணப்படும் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட சிசிடிவி கேமரா மூலம் வாகன தணிக்கை, ரோந்து பணிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நாளை 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது .

கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் இந்த சுதந்திர சுதந்திர தின விழாவில், கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களை கௌரவிக்கும் வகையில் முன்களப்பணியாளர்கள் சிலருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் கோட்டை முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை செயலபடவுள்ளது. எனவே விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் ஆயுதங்களுடன் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக சந்தையாக செயல்பட்டு வரும் விழுப்புரத்தில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்